Wednesday, December 21, 2011

கேள்வி பதில் நாயகருக்கு ஒரு கேள்வி ?


மே மாதத்திற்கு முன் கேப் விடாமல்

திரைப்படத்துறையில் இயங்கிய நிதி கம்பனிகள்

தற்போது அவ்வளவாய் களத்தில் இறங்காத காரணத்தை

கலைஞர் சொல்வாரா ?

Wednesday, December 7, 2011

நோபல் பரிசு - மன்மோகனுக்கா ? ஜெ. வுக்கா . .?


இந்த வருட நோபல் பரிசு யாருக்கு . . ?

இந்தியாவை வல்லரசாக்க முடியாது . . .
ஆனால் வல்லரசுகளிடம் விற்க முடியும்
என கண்டுபிடித்த மன்மோகனுக்கா ?பேருந்தில் பயணித்து கொண்டிருந்த பயணிகள்pடம்
ஆட்டோ - டாக்ஸி கட்டணத்தை வசூல் செய்து
நூதன முறையில்
அவர்களின் வாழ்வுத் தரத்தை
உயர்த்திய ஜெ. வுக்கா . .?

Saturday, December 3, 2011

கனி ரிடர்ன்ஸ்
மூணாவது வீட்டுல இருந்த கிளார்க்கு சுந்தர்

3000 லஞ்சம் வாங்கி மாட்டி
ி
15 நாள் உள்ள இருந்து வந்தாரு . . .


வந்தவுடன் கூச்சபட்டுகிட்டு
வீட்டை காலி பண்ணி வேற ஏரியா போயிட்டாரு . . .

ஆனா இங்க என்னா வரவேற்பு . . . !இதான் 1,76,000வாலாவா . . . ?

Saturday, November 19, 2011

ஒஸ்தி சரக்கு


எல்லாம் விவரம் இல்லாம பேசுறாங்க . . .

குடிச்சிட்டு வீட்டுக்கு போற அப்பன்காரன்

புள்ளைகுட்டிகளை தூக்கிபோட்டு மிதிச்சா

அதுகளை . . . .

நூலகத்துல வச்சா சிகிச்சை குடுக்க முடியும் . . . ?

Thursday, November 17, 2011

பஸ் கட்டண உயர்வு
அண்ணா ஹசாரே போராட்டத்திற்கு இவ்ளோ ஆதரவா ?

நீ வேற . . . பஸ் கட்டண உயர்வுனால எல்லாம் நடந்து போறாங்க . . .

Thursday, October 27, 2011

7 - ஆம் அறிவு -- எ பிலிம் பை ஏ.ஆர். முருகலாஸ்


- கமல்ஹாசன் மன்மதன் அம்பு படம் பண்ணியபோது
எல்லோருக்கும் ஆச்சர்யம் . . .
சத்யா- அன்பே சிவம் போன்ற
விழிப்புணர்வு படம் செய்தவர்
இது மாதிரியான ஆட்களோடு இணைந்து
எப்படி ?

ஆனால் . . . படம் வெளிவந்த போதுதான் தெரிந்தது . . .
மோசமான படம் எடுத்து குடுத்து . . .
அவர்களை ஒழித்து கட்டும்
உத்திதான் அது என்பது . .

- அதே போல் லஞ்சத்திற்கு எதிராய் ரமணா படம்
எடுத்த முருகதாஸின்
புரொடியுசரை ஒழித்து கட்டும் போராட்ட முயற்சியே


7 - ஆம் அறிவு

முருகதாஸிற்கும் . .
அவருடைய முயற்சிக்கு தன் வாரிசை அனுப்பி
ஆசிர்வதித்த கமலுக்கும் பாராட்டுக்கள்


முருகதாஸ்தான் கல் . . . உதயநிதிதான் கண்ணாடி . . .
குறி தப்பவில்லை

Friday, October 21, 2011

ராகுல் காந்தி - இந்தியாவின் புதிய காமெடி பீஸ்


உலகமயமாக்கலின் பலன்கள் அடித்தட்டு மக்களை

சென்றடையவில்லை
. . . . ராகுல்காந்தி

அட காமெடி பீசே . . . .
இத கண்டுபிடிக்க உனக்கு இவ்ளோ நாளா . . . ?

நீயெல்லாம் பிரதமர் ஆகி . . . .
நாடு வெளங்கிடும்

Friday, October 7, 2011

ஒரு நகைச்சுவை செய்தி


அன்னை தெரசாவுடன் ஒப்புமைப்படுத்தி


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு


அமைதிக்கான நோபல் பரிசுக்கு சர்வதேச விழிப்புணர்வு மையம் என்ற ஒரு அமைப்பு பரிந்துரைத்திருந்தது.


ஆனாலும் சோனியாவுக்கு விருது கிடைக்கவில்லை.

-----செய்தி

Tuesday, October 4, 2011

மன்மோகன் வாழ்க . . . .


இன்ஜினியரிங் கவுன்சிலுக்காக

சென்னை வந்த அண்ணன் மகன்

வடபழனி சிக்னல் நெரிசல்ல மாட்டினப்ப கேட்டான்

" globalaization- ங்குறது என்ன சித்தப்பா "

சித்தப்பா சொன்னாரு . . .

" 48 பேரு போற பஸ்சுல 120 பேரு போறதும்

6 பேரு போற காருல ஒருத்தன் போறதும்தான் "

Sunday, September 25, 2011

இந்தியாவின் அசிங்கங்கள் - 1


----- ஊழலை உண்ணாவிரதம் மூலம் ஒழிக்க வாய்ப்பில்லை
அதை திருட்டுன்னு (Theft) நேரடி அர்த்தத்தில் சொல்ல ஆரம்பித்தால்
குறைய வாய்ப்புண்டு ....

----- சிதம்பரம் மேல நம்பிக்கை இருக்குனு மன்மோகன் சொல்லிருக்காரு
அனா இவுங்க ரெண்டு பேர் மேலயும் மக்கள் நம்பிக்கை இழந்து
ரொம்ப நாளாச்சு . . .

----- படிச்சவங்க அரசியலுக்கு வரணும்னு
ரொம்ப நாளா நெறைய பேர் சொல்றாங்க . . .
இனி படிச்ச நல்லவங்க மட்டும் அரசியலுக்கு வாங்கன்னு அதை
மாத்துங்கப்பா

Friday, September 16, 2011

எங்கேயும் எப்போதும் . . . ஒரு நல்ல முயற்சி . . .


படத்தின் இறுதியில் இயக்குனர் பெயர் போடும்போது

எழுந்து நின்று கைதட்டுகிறார்கள் . . .

இதற்கு மேல் இந்த திரைப்படம் குறித்து என்ன சொல்ல . . . .

அதை விடுத்து 37g- ல் செயின் பஸ் கிடையாது . . .

அது அண்ணாநகர் டெப்போ கீழ் வராது

என்றெல்லாம் எழுதினால்

நேர்மையாக இருக்காது . . .

இயக்குனர் சரவணனுக்கு பாராட்டுக்கள்


....... மினி

Thursday, August 4, 2011

7 - ம் அறிவுன்னா என்ன ?


7 - ம் அறிவுன்னா என்ன ?

என்ட்ரி ஆகும்போது லஞ்சத்துக்கு எதிரா படமெடுக்குறது . . . .

அப்புறம் . . .

எஸ்டாபிளிஷ் ஆகுறதுக்காக

எப்படி வந்த பணம்னு தெரியாமலே

படமெடுக்குறது . . .

Tuesday, July 12, 2011

உயர்திரு 420


சேனல் இருக்கு . . .
விமானம் இருக்கு . . .
பல கம்பெனிகள்ல ஷேர் இருக்கு . . .
நாளிதழ் இருக்கு . . .
புத்தகம் இருக்கு . . .
படகம்பெனி இருக்கு . . .
இன்னும் என்னென்னமோ இருக்கு சொந்தமா . . .
இல்லாதது ஒன்னே ஒன்னுதான் . . .
அது . . .

நேர்மை . . . . !

Tuesday, July 5, 2011

தம்பியும் கம்பியும்


சன் பிக்சரஸ் சாக்ஸ் கைது ------- செய்தி

Thursday, June 23, 2011

முரண்


திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 
கனிமொழியின் உடலில் கொப்புளங்கள்
ஏற்பட்டு வாடுவதாக 
தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.
                                                  ----------------- செய்தி 

Wednesday, June 22, 2011

ஒண்ணுமே புரியலை . . .


ஆனா . . . ஊன்னா  
அடிக்கடி உண்ணாவிரதம்னு சொல்றாங்க . . .  

ஆனாலும் பாருங்களேன் . . . 
மதியம் 3 மணிக்கு போனா பிரியாணி இல்ல குஸ்காதான் இருக்கு . .  

நைட்டு 10 மணிக்கு மேல இட்லி இல்ல . . 
புரோட்டா தான் கிடைக்குது . . அதுவும் சிக்கன் சால்னா இல்ல சாம்பார் தான் இருக்குங்குறாங்க . என்னவோ போங்க . . .  
ஒண்ணுமே புரியலை . . .

Friday, June 17, 2011

தியாகிகள் முன்னேற்ற கழகம்


மேற்கண்ட மூவரும் நாட்டு மக்களுக்காக மிகவும் கஷ்டப்பட்டதை
சிபிஐ உறுதி செய்துவிட்டதால்
இனிவரும் நாட்களில் திமுக . . . .

தியாகிகள் முன்னேற்ற கழகம் என அழைக்கப்படும்

Thursday, May 26, 2011

என்ன தேசமடா . . . ?


மானாட மயிலாட என

கலைஞர் டிவி மூலம் தமிழ் வளர்க்க

கொள்ளையடித்தது குற்றமா . . . ?

என்ன தேசமடா . . . ?

சரி சரி . . .

கழககுடும்பத்தினர்களால் பிளைட் எல்லாம் சனமா நெரம்பி வழியுது . . .

பிளைட் கம்பெனிகாரன் கமிஷன் பணத்தை

கலைஞர் டிவிக்கு குடுப்பானா . . .

தமிழ் மையத்துக்கு குடுப்பானா . . .?

Thursday, May 19, 2011

ஒரு சாதாரண மனிதர்தான் . . .


சுமார் 30 வருடங்கள் இருக்கும் . . .

நான் நான்காம் வகுப்பு படித்து கொண்டிருந்த நேரம் . . .

வீட்டு அருகாமையில் ஒரு ரிக்ஷாக்காரர் வசித்து வந்தார் . . .

அவர் ஒன்றும் இலக்கியவாதியில்லை . .

வசனகர்த்தாவும் இல்லை . .

ஒரு சாதாரண மனிதர்தான் . . .

ஆனால் . . . தன் ரிக்ஷாவில் எழுதியிருந்தார் . . .
"பேராசை பெருநஷ்டம்"Wednesday, April 20, 2011

காத்திருந்தபோது . . .


மின்வாரிய வேலை சிபாரிசுக்கு

அமைச்சரின் பி.ஏ.- வோட

சகலையோட சித்தப்பா பையனின்

நண்பரோட பக்கத்து வீட்டுக்காரரை

பார்ப்பதற்காக காத்திருந்தபோது . . .

" மின்வெட்டு நேரத்திலுடம் ஒளிர்ந்தது . . . ஆற்காட்டாரின் கார் சைரன் விளக்கு " - னு

கல்லூரி மலர்ல எழுதுனது

ஏனோ நினைவுக்கு வந்து இம்சித்தது .

Monday, April 11, 2011

வாக்களிப்போம்

சொந்த கட்சி வேட்பாளரையே அடித்த விஜய்காந்துக்கா ஓட்டு . . .?

ஒன்றரை லட்சம் தமிழர்கள்

3000 சீக்கியர்கள் படுகொலைகளுக்கு

துணைபோன காங்கிரஸ் கூட்டணிக்கே நம் ஓட்டு . . .

Tuesday, March 29, 2011

பிரியாணியில பரங்கிக்காய்


"2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் கேள்வி:

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் உங்கள் மகளையும், மனைவியையும் சி.பி.ஐ. விசாரித்துள்ளது. கலைஞர் தொலைக்காட்சியின் கணக்குகளையும் விசாரித்துள்ளது. இதன்காரணமாக, உங்களுக்குத் தெரியாமல் இதில் எதுவுமே நடைபெற்றிருக்க முடியாது என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்களே?

பதில்:

இது ஊழலே அல்ல. இதைப் பற்றி செய்திகள் வெளிவந்துள்ளன. கலைஞர் டி.வி. என்பதில் என் பெயர் இடம்பெற்றிருக்கிறதே தவிர எனக்கு அதில் எந்தவிதமான உரிமையும் கிடையாது. அதில் என்னுடைய மகள் (கனிமொழி) 20 சதவீத பங்குதாரர். என்னுடைய மனைவி தயாளு 60 சதவீத பங்குதாரர். நிர்வாகி சரத்குமார் 20 சதவீத பங்குதாரர். கலைஞர் டி.வி. கருணாநிதிக்கு சொந்தமானதல்ல. கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் அதிலே பங்குதாரர்களாக இருக்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டு எழுந்தவுடனேயே அதுகுறித்து சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார். ஒரு கடனை அடைப்பதற்காக ஒருவரிடம் கடன்பெற்றார்கள். பிறகு பெற்ற கடனை வட்டியோடு திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அதற்கு வட்டி, வருமான வரித்துறைக்கான தொகை எல்லாம் தரப்பட்டு, வருமானவரித் துறைக்கும் விவரம் தெரிவித்துள்ளனர். இதற்குப் பிறகு அது எப்படி ஊழலாகும் என்று எனக்குத் தெரியவில்லை. "
ஸ்பெக்ட்ரம் ஊழலில் இந்த கடன்விவகாரத்தில் மட்டுமே

இவர்களுக்கு தொடர்பு என்பது போல் விவகாரத்தை திசை திருப்ப முயல்கிறார் கலைஞர் . . .

சோத்துல பூசணியை மறைத்த காலம் போய் பிரியாணியில பரங்கிக்காயை மறைக்கிறார்

தமிழகத்தின் தலைசிறந்த ராஜதந்திரி

Sunday, March 27, 2011

The Mummy Returns


" என்ன சசி . . . நாம திரும்ப வந்துடுவோம் போலிருக்கு . . . "

" அப்படித்தான் தெரியுது . . . வந்துட்டா . . .

ஸ்டேட் லெவல்லேயே 1.75 லட்சம் கோடியெல்லாம் பீட் பண்றோம் "

Tuesday, March 22, 2011

கலைஞர் எப்போதுமே கலைஞர்தான். . .


" விடுபட்டோர்- விரட்டப்பட்டோர்- துரத்தப்பட்டோர்- விலை போகாது வெங்குருதி தனிற் கமழ்ந்த எங்கள் வீர மூச்சு- தமிழ் மூச்சு எனத் தடந்தோள் தட்டி வந்திடுவீர் வாகை சூட என்று கண் மூடி தவம் இருக்கும் துறவிகளைப்போல்- தூய ஞானிகளைப்போல் -நான் தவம் இருக்கின்றேன்- என் உயிரினும் இனியோரே! இன்ப முடிவினை எல்லோரும் சேர்ந்து சுவைப்போம்! வருக! வருக! வரிப்புலி வரிசையே வருக"

------ முதல்வர் கருணாநிதிஎதிரியே ஆனாலும் ஒருவர் தர்மசங்கடமான

அவமானசூழலில் சிக்கிதவிக்கையில்

அவரை சீண்டுவது என்ன விதமான அரசியலோ . .?

நிச்சயம் அப்படி செய்வது அருவருப்பான ஒன்றுதான் . . .

ராஜினாமா என்று கூறிவிட்டு ராகுல்காந்தியிடம் மண்டியிட்டதைவிட

வைகோவின் நிலை அவ்வளவு கேவலம் அல்ல. . .

ஆனால் ஒன்று நிச்சயம் கலைஞர் எப்போதுமே கலைஞர்தான். . . தலைவர் அல்ல

Monday, February 14, 2011

விடுமுறை தினம்


விடுமுறை தினம் . . . அப்பா கேட்டார்; " எங்கே போலாம் ? "

வண்டலூருக்கு கூப்பிட்டான் மகன்

மகளோ சினிமாவுக்கு அழைத்தாள்

வழக்கம் போல் மகளின் ஆசையை நிறைவேற்றினார் அப்பா

மல்ட்டிபிளெக்ஸ் ஒன்றில் நுழைந்தனர்

அங்கு மகனும் அடைந்தான் . . . ஓரளவு சந்தோஷம் . . .


Friday, February 11, 2011

கலைஞர் -தங்கபாலு .... ஹி ... ஹி ....

கலைஞர் --- என்னய்யா . . உன் வேட்டியில திமுக கலரை காணோம்

தங்கபாலு --- எப்படியும் போட்டோ எடுப்பாங்கனு தெரியும் அதனால ஹி ... ஹி ....

Thursday, February 3, 2011

உழைக்கும் மக்களுக்கு உதவ வேண்டும்


சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த காரணத்தால் தான்

உழைக்கும் மக்களுக்கு உதவ வேண்டும்

என்ற எண்ணம் தன்னிடம் உருவானது - கலைஞர்


Monday, January 31, 2011

234 - ம் உங்களுக்குத்தான் . .234 - ம் உங்களுக்குத்தான் . . . ஆனால் . . . இனியாவது தமிழனை காப்பாற்றுங்கள்

Wednesday, January 26, 2011

கருணாஸின் ஆகச்சிறந்த காமெடி
நேதாஜி இருக்கிறாரா இல்லையா எனும் ஐயம் இனி இல்லை

Wednesday, January 19, 2011

இளைஞனின் இமாலய வெற்றி . . .


இளைஞனின் இமாலய வெற்றி . . .