Tuesday, November 30, 2010

Tuesday, November 16, 2010

யப்பா . . .


தனித்தனியா தொழில் பண்ணுனாலும்

ஓத்துமையா தியேட்டர்களை வளைச்சி . . .  

காட்சிகளை பிரிச்சி . . .

யப்பா . . . கண்ணைகட்டுதே . . .

Sunday, October 24, 2010

புரிஞ்சிக்காதவங்க . .


9.50 தான் ஆச்சு . . .  
ஆனாலும் கடை அடைச்சிட்டாங்க . 20 ருவா எக்ஸ்ட்ரா குடுத்தும் மன்ஷன் ஹவுஸ் கிடைக்கல . . . அனகோன்டான்னு 
ஒண்ணு குடுத்தான்  
நாத்தம் எனக்கே தாங்கலை. 10.40 க்கு பஸ்ல ஏறுனேன்  
12 பேரும் என்னை அருவருப்பா பாத்தாங்க  
போகட்டும் விடுங்க  
அவுங்க உபயோகபடுத்துற கவர்மென்டு டிவி க்கும்  
ஒரு ருவா அரிசிக்கும்  
நானும் காரணம்ங்கறதை புரிஞ்சிக்காதவங்க . .

Tuesday, October 19, 2010

இருவர்



மாநகர் பேருந்தில் . . . மூணு ருவா டிக்கட்டுக்கு பதில் ரெண்டு ருவா டிக்கட் வச்சிருந்தவரை செக்கருங்க துருவித்துருவி விசாரிக்க .. சிரித்துக்கொண்டே சைரன் காரில் போய்க்கொண்டிருந்தார் . . . ஒரு லட்சம் கோடி ருவா லபக்கிய ஊழல் மகாராசா . . . . .

Sunday, October 10, 2010

எந்திரனுக்கு பேத்தியை அழைச்சிட்டு போன பெரியவர்


பவர்ரேஞ்சர் மாறி இருக்குன்னு பலர் சொல்றதை கேட்டு எந்திரனுக்கு பேத்தியை அழைச்சிட்டு போனார் பெரியவர் ஒருத்தர் . . .  
படம் போய்கிட்டே இருந்துச்சி . . . பேத்தி திடீர்னு கேட்டாள் . . . " அந்த அத்தை. . 
தாத்தா கன்னத்தை என்ன பண்றாங்க ?"  
12 வருஷமா தம்மடிக்காத தாத்தா
கேண்டினுக்கு நகர்ந்தார்

Friday, October 1, 2010

எந்திரன் - ஓரு தாத்தாவின் காதல் கதை




350 ரூவா குடுத்து  
முதல் காட்சிக்கு போய்  
60 வயசு தாத்தா 
ஒலக அழகியோட  
ஆடுறதை பாத்த தமிழன் 
ஒருத்தனுக்கு  
சத்தியமா ஞாபகம் வரலை . . . . போன தடவை ஊருக்கு 
போனப்ப தாத்தா கேட்டது  
' ஏம்ப்பா இந்த தீபாவளிக்காவது 60 ரூவா வேட்டி எடுத்து தருவியா . . .?"

Monday, September 27, 2010

வால்-போஸ்டர்கள்





எந்திரன் ரிலீஸையொட்டி தினகரன் குழும பத்திரிக்கைகள் செய்தித்துறையில் ஒரு புரட்சியே உண்டு பண்ணிவிட்டன எனறால் அது மிகையாகாது . . .

விரைவில் வால்-போஸ்டர்கள் இப்படியும் வரலாம்  

Sunday, September 12, 2010

'இவ்ளோ கண்ணாடிபுட்டிகளா . . . "


மேல்நிலைப்பள்ளியில்ஆறாம்ப்பு சேர்ந்தனர் நண்பர்கள் ராமுவும் சீனுவும் . . .
கெமிஸ்ட்ரி லேபை பார்க்கஅவர்களுக்கு ரொம்ப நாள் ஆசை . . .
ஒரு நாள் நுழைந்துவிட்டனர்.
ராமுவுக்கு பிரமிப்பு தாங்கவில்லை . . .
'இவ்ளோ கண்ணாடிபுட்டிகளா . . . "
சீனு அலட்சியமாய் சொன்னான் . . .
'நீ வேற . . . எங்க வீட்டு அடுப்பங்கறை பரண்லஇதை விட அதிகமா அடுக்கிவச்சிருக்காரு எங்கப்பா .."

Wednesday, September 1, 2010

கணடுகொள்ளாதது ஏனோ?




தர்மபுரி பஸ்

எரிப்பு தீர்ப்பு குறித்து
விரிவாக கவரேஜ் செய்துள்ள தினகரன் நாளிதழ்

தங்கள் மதுரை அலுவலக எரிப்பு வழக்கு பற்றி
கணடுகொள்ளாதது ஏனோ?

Friday, August 6, 2010

யார் ஹீரோ ?

60 வயதில் அடுத்தவர் மனைவியிடம் முத்தம் வாங்கும் இவர் ஹீரோவா ?




அல்லது அசிங்கம் பாராது உழைக்கும் இவர் ஹீரோவா ?

Sunday, July 18, 2010

என் அம்மா மட்டும் ஒத்துக்கொள்ளவே மாட்டாள்


டீக்கடையில் காபி கேட்டேன்
டபரா செட்டில் கொடுத்தார்கள்

கூட்டநெரிசல் பேருந்தில்
இளம்பெண் ஓருத்தி இருக்கை கொடுத்தாள்

தொடர் வண்டி முன்பதிவில்
கட்டணசலுகை கிடைத்தது

பலானபட இடைவேளையில்
என்னையே அனைவரும் கவனித்தனர்

ஜவளிக்கடையில் ஜீன்ஸ் செக்ஷனில்
சுற்றினால் . . கடைப்பையன்கள் சிரிக்கிறார்கள்

சென்ட் பாட்டிலோடு வீட்டிற்கு போனால்
மனைவி கூட முறைக்கிறாள்




ஆனால் . . . .
என் அம்மா மட்டும் ஒத்துக்கொள்ளவே மாட்டாள்
எனக்கு வயதாகிவிட்டதை . . . .

Tuesday, June 29, 2010

தமிழ்ச் செம்மொழி



கே.கே. நகர்லேந்து
செவன்ட்டீன் டி பிடிச்சி
சென்ட்ரல் போய்
இண்டர்சிட்டியில் ஏறி
கோவை ஜங்ஷன்ல இறங்கி
போடப்பட்டிருந்த ரூமுக்கு
ஆட்டோவுல போய்
செல்போனை சார்ஜ் போட்டுட்டு

"அப்பாடா லேட் ஆகாம
கரெக்ட் டயத்துக்கு வந்துட்டோம்" னு
மனதுக்குள் பெருமூச்சு விட்டார் . . .

தமிழ்ச் செம்மொழி மாநாட்டில்
கலந்துக்க போன தமிழர் ஒருத்தர் .

Monday, June 21, 2010

Saturday, June 5, 2010

ஹி . . . ஹி . . .

அனுஹாசன் காதுல இருக்குற தொங்கல்
வேணும்னு
மனைவி என்னை தொங்குறது இல்ல . . .

அனுஷ்கா போட்டுருக்குற ஜீன்ஸ்
வேணும்னு
என் மூத்த பொண்ணு தொல்லை பண்றதில்லை

அருண் ஐஸ்க்ரீம் ஐ கோன்
வேணும்னு
சின்னப்பையன் நச்சரிக்கிறதில்லை

இதைல்லாம் நினைக்கும் போது
பத்து நாள் முன்னாடி
பழுதான டி.வி பொட்டிய
சரி பண்ணனும்னு தோணவே மாட்டேங்குது . . .

Tuesday, June 1, 2010

விகடனில் ஒரு சரியான மதிப்பீடு








தமிழக முதல்வர் பற்றி

நேரு ஸ்டேடியத்திலும் வள்ளுவர் கோட்டத்திலும்

பல்வேறு புகழ் மதிப்பீடுகள்

ரஜினி - கமல் தொடங்கி

வைரமுத்து - வீரமணி போன்றோர்களால்

அடிக்கடி பொளக்க வாசிக்கபடுகின்றன . . .


இந்த சத்தங்கள் தாங்காத வள்ளுவர் கோட்டத்து

தேர்கூட கொஞ்சம் கொஞ்சமாய் அவ்விடத்தை

விட்டு நகர்வதாக கேள்வி . . . . .

இந்நிலையில் விகடனில் ஒரு சரியான மதிப்பீடு

Tuesday, May 25, 2010

தெரியாமத்தான் கேட்குறேன் . . .



தினம் ஒரு அழைப்பாவது வந்துடுது . . .

----- இன்சூரன்ஸ்லேந்து மதுமிதா பேசுறேன்

------ க்ரெடிட் கார்டு சம்பந்தமா கௌதம் பேசுறேன்

-------- லேந்து ஷாலினி பேசுறேன் உங்களுக்கு 

  போஸ்ட்பெய்டு கனெக்ஷன் வேணுமா . . .?


டொக் . . . .

தெரியாமத்தான் கேட்குறேன் . . .

முனீஸ்வரி . . . பொன்னுச்சாமி - ன்லாம்

பேர் இருந்தா அங்க வேலை கிடையாதா . . .

இல்ல பேரை இப்படி மாத்திக்கணுமா . . .?

Sunday, May 16, 2010

Cinema Master






முதல்வருடன் வடிவேலு சந்திப்பு
சிங்கமுத்து கைது 

முதல்வர் தலைமையில் . . .

பாரதிராஜாவுக்கு விருது வழங்கும் விழா

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பாராட்டு விழா

ரஜினி மகள் நிச்சயதார்த்தம்

ரம்பா திருமண வரவேற்பு

பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா

பெண்சிங்கம் ஆடியோ ரிலீஸ்

இளைஞன் படத்துவக்க விழா

எஸ்.வி.சேகர் நாடக விழா

இன்னும் . . . இன்னும் . . .

Tuesday, May 11, 2010

Kelvi - Padhil


5 க்கும் 6 க்கும் வித்தியாசம் என்ன ? சிம்பிள். . . ஒண்ணு . . .! சரி . . அஞ்சறிவுக்கும் ஆறறிவுக்கும்? ரொம்ப சிம்பிள் . . . ஆனா கொஞ்சம் டீடெயிலா இதோ . . . 5 - தன்னை தேடி வந்து தொல்லை பண்றவங்களை கொல்லுமே தவிர விஜய் சூர்யான்னு பேர்ல படம் எடுத்துக்கொல்லாது 6 - தமன்னா அனுஷ்கா இடுப்பைக்காட்டி விளம்பரப்படுத்தி சுறா சிங்கம்னு
பேர் வச்சி தியேட்டருக்கு இழுத்துட்டு
வந்து கொல்லும்

Thursday, May 6, 2010

Spectrum



ஒரு பொது அறிவுத்தகவல்  
 
நம் தமிழ் ஊடகங்களில் தினமும் எவ்வளவோ புள்ளி விவரங்கள் வெளியாகின்றன . . . 
உலகின் . . .  
அதிநவீன கார் . .  
விலை உயர்ந்த நெக்லஸ் . .  
2 வருஷம் மணக்கும் செண்ட் . . கிழியாத பேண்ட் . . போன்றவைகளின் தொடர்ச்சியாய் ஒரு தகவல் இதோ . . . . . .  




2 தலைமுறைக்கு போதை இறங்காமல் இருக்கிற  
உயர்ரக "ஸ்பெக்ட்" என்கிற  
"ரம்" மின் விலை ஒரு லட்சம் கோடி ரூபாயாம்

Sunday, May 2, 2010

Oru Sandeham








கலைஞரின் இளைஞன் படத்தயாரிப்பாளர்
லாட்டரி மார்ட்டினாய் இருப்பதில் 
சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில்


ஒரு சந்தேகம் . . .

தமிழகமெங்கும் தியேட்டர்களை வளைத்து
மாதம் ஒரு திரைப்படத்தை
ரிலீஸ் செய்யும் சன் பிக்சர்ஸ்
ரெட் ஜயண்ட் மற்றும் க்ளவுட் நைன்
ஆகிய நிறுவனங்கள் 
கலைஞர் வசனத்திரைப்படங்களுக்கு

ஆதரவு தராதது ஏனோ ?

 

Thursday, April 29, 2010

Idhudan India

ஐபிஎல்- ல் பல கோடி ஊழல்

ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் லட்சம் கோடி இழப்பு

எம்.சி.ஐ சேர்மன் --- 1800கோடி லஞ்சப்பணம்


இவ்வாறான செய்திகள் நிரம்பிய நாளிதழை

விரித்துப்போட்டு தூங்கிகொண்டிருந்தான்

பிளாட்பாரத்தில் ஒருவன் . . . .

Monday, April 26, 2010

Thursday, April 22, 2010

IPl

Isaiaruviyil Kandadu

அங்காடிதெரு குழுவினர் பங்குபெறும் பேசும் நட்சதிரம்  வழங்குபவர்கள் ஜெயச்சந்திரன் ஜவுளிக்கடை







இதுதான் நுகர்வுகலாசாரம்  எனபடுவதோ ?

Wednesday, April 21, 2010

Thazh

நாகரிக மனிதர்கள்
நன்றி கூறிக்கொண்டே இருக்கிறார்கள்
தாழ்ப்பாளுக்கு