Sunday, April 12, 2015

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது - 2015 ன் முதல் நல்ல தமிழ் சினிமா

சத்யஜித்ரே இன்று இருந்து . . . இருக்கிற விசயங்களை வைத்துக்கொண்டு ஒரு தமிழ் படம் எடுத்தால் . . . 

அது இப்படிதான் இருக்கும் . . . . குழுவினருக்கு வாழ்த்துகள் . . . . 

Saturday, March 21, 2015

லிங்கா 100 - வது நாள்


முன்னெல்லாம் 100 நாள் ஓடுனா வெற்றின்னு சொல்வாங்க . . . 

இப்ப 100 வது நாள் மட்டும் ஓட்டுனாலே வெற்றிங்குறாங்க .இப்படியும்  ஒரு பொழப்பு . . . 

Sunday, February 8, 2015

என்னை அறிந்தால் - ஆஞ்சநேயா - 2______  ஓர் ஆக்‌ஷன் படத்தை வாய்ஸ் ஓவரில் டாகுமென்டரி போல் எடுப்பது ஒரு புதிய முயற்சிதான் . . . 

 ஆனால் 3 மணி நேரம் . . . நம்மளால முடியலடா சாமி . . . !

______  அஜித் போன்ற பெரிய ஸ்டார் மற்றும்  அருண் , அனுஷ்கா ,  திரிஷா . . . . இப்பயொரு  வேல்யூ உள்ள ஆளுங்களை வச்சி எப்படி எடுத்துருக்கலாம் . . 
ஆனா ஏன் இப்படி ? 

______  சினிமா இயக்குனர் ஆசையில் . . . ஊரில் இருந்து புறப்பட்டு வடபழனி சிக்னலில் இறங்கும் ஒருவரிடம்  . . . ரத்னம் இந்த பிராஜக்ட்டை குடுத்திருந்தால் அவர் நிச்சயம் இதை விட  நன்றாக செய்திருப்பார் . . . அப்படி ஒரு கிளிஷே மொக்கை 


 ______  தியேட்டரில்  ஒரு அஜித் ரசிகர் இப்படி சொன்னார் . . . 

" இயக்குனர்  பேரு கவுதம்வாசுதேவமேனன் இல்ல  லூசுதேவமேனன்    "

   நல்லவேளை . . . படத்தில் அடிக்கடி மியூட் ஆகும் ஒரு வசனத்தை சொல்லி டைரக்டரை திட்டாமல் விட்டாரே ?

______   " ஐ "படம் பாக்கும்போது தோணுன விசயம்தான் இந்த படம் பாக்கும்போதும்  தோணுச்சி  . . . 

இந்த ஷங்கர் மற்றும் மேனன் மாதிரி ஆளுங்க கதை , ஹீரோ கால்ஷீட் , கோடிக்கணக்கான பணம் ஆகியவற்றை விட அதிகம்  நம்புவது ரசிகர்களின் அறியாமையைத்தான் போல . . . . ? 

Saturday, January 24, 2015

தொட்டால் தொடரும் - ஐ ஷங்கரை முந்திய கேபிள் சங்கர்திரையுலகில் ரெண்டே மேட்டர்தான்  . . . முதல் படம் செய்பவர் ஒன்று  நல்ல படம் பண்ணனும் இல்ல  . . . படம் நல்லா  பணம் பண்ணனும் . .  

இது இரண்டும் இல்லாமல் வழக்கம் போல் நிறைய பேர் செய்வது போல் நானும் ஒரு படம் பண்ணிட்டேன் என்ற தொனியிலேயே உள்ளது இந்த படம் .
____________

மௌன குரு மற்றும் மதுபானக்கடை படங்களை அவர் விமர்சனம் பார்த்து . . . பார்த்த பேபி ஆல்பட் திரை அரங்கில் . . . அவர் படத்தை பார்த்தது ஒரு இனிய அனுபவம் . . . ஆனால் . . . அந்த படங்களில் இருந்த தன்மை இவர் படத்தில் கொஞ்சம் கூட இல்லாதது வருத்தமே .

______________


கதையை தேர்ந்தெடுத்தத்திலேயே தவறு செய்துவிட்டார் . . . அதில் தொட்ட தவறான விசயம் . . . படம் முழுக்க தொடர்கிறது  

_______________
போன் பேசும் காதலர்கள் . . . மொக்கை ஜோக் நண்பன் . . சீரியல் போல் நாயகி குடும்ப பிரச்னைகள்  . . . விரட்டும் வில்லன் என டெம்ப்‌ளேட் காட்சிகள் 

__________

பின்னணி இசை செம மொக்கை . . . ஒளிப்பதிவு மட்டுமே ஆறுதல் 

___________

இந்த படம் நல்லாருக்குன்னு இயக்குனர் கேபிள் சங்கர் வேண்டுமானால் சொல்லலாம் . . . திரை விமர்சகர் கேபிள் சங்கர் சொல்ல வாய்ப்பே இல்லை 
_____

சில நிறுவனங்களில் சம்பளத்துடன் கூடிய பயிற்சி தருவார்கள்  . . . அது போலவே இந்த  முயற்சியை செய்துள்ளார்  கேபிள் சங்கர் . . . அவர் பெற்ற இந்த பயிற்சி அவருடைய அடுத்த படத்திற்கு உதவட்டும்

____________
ஷங்கரின் ஐ படம் 3 மணி நேரம் நெளிய வைத்தது . . . இந்த படம் 2 மணி நேரம் . . . அந்த வகையில் பார்க்கும் போது ஷங்கரை சங்கர் வென்றுவிட்டார் என்றே சொல்ல வேண்டும்  

Saturday, January 17, 2015

" ஐ "ந்து கேள்விகள் . . . . ?1 . 100 ரூவா குடுத்து தரமான தமிழ்ப் படம் பாக்க நினைப்பவனுக்கு இருக்கும் அக்கறை 

100 கோடி குடுத்து படம் எடுப்பவர்களுக்கு இல்லாதது ன் ?

2 . நீங்க கஷ்டப்பட்டு உழைத்தீர்கள் சரி  . . .  அதுக்காக படம் பாக்க வந்தவனும் கஷ்டப்படணுமா ?

3. இந்த படம் வாங்கிய சென்சார் சான்றிதழ் தன்மை பற்றி போஸ்டர் மற்றும் நாளிதழ் விளம்பரங்கள் வெளியிடப்படாதது ஏன் ?  

4. பெண்கள் மற்றும் அரவாணிகளின் உணர்வு குறித்து தொடர்ச்சியாய் கொச்சையாய்  படம் எடுக்கும் இந்த இயக்குனரின் மனநிலைக்கு கவின்சிலிங் குடுக்கப்போவது யார் ?

5 . வெறும் காசுக்காக இது போன்ற கேவலமான திரைப்படங்களில் சர்வதேச கலைஞர்கள் பணி

புரிவது சரியா ?