Friday, August 24, 2012

கலைஞரின் டெசோ - அட்டகாசம்

அட்டகாசம் படத்தில் ஒரு காட்சி உண்டு . . .

அது என்னவெனில்

பிணம் இல்லாத வெறும் பாடை ஒன்றை ஒரு குழுவினர்

தூக்கி வருவர் . .

இன்னொரு பக்கம் மற்றொரு குழுவினர் ஒருவனை

விரட்டி வந்து வெட்டி கொல்வர்

பிறகு இரு குழுவினரும் இணைந்து

செத்தவனை பாடையில் தூக்கி வைத்துகொண்டு

சந்தோசமாய் செல்வர்

இதுதான் கலைஞரின் டெசோ . . .

அக்கூட்டத்தில் மற்றுமொரு காட்சி . . .

ஸ்டாலின் மற்றும் வீரமணி தோன்றியதுதான்


ஒருவர் மட்டன் சாப்பிட்டு லேசாக பல் வலித்தால் கூட

சிகிச்சைக்கு லண்டன் செல்வார்

மற்றொருவர் நகம் கடிக்கும்போது விரலில் லேசாக ரத்தம் கசிந்தால்

அமெரிக்க ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிவிடுவார் . . .

ஆனால் முக்கிய சிகிச்சைக்காக பார்வதி அம்மாள்

சென்னை வந்த போது .. . . . . ?

Friday, August 3, 2012

மதுபானக்கடை - தெளிவாய் ஒரு முயற்சி

1.

படம் துவங்கும் போதே

ஒரு எதிர் குரல் . .

" என்னங்கடா Montage Media

Vintage ன்னு மாத்துங்கடா . . . "

2.

Interval விடும் போது

"இங்கு டீ தான் கிடைக்கும்

சரக்கு கிடைக்காது "என்று திரையில் குரல் ஒலிக்க . .

ஒருவர் முனகலாய் சொல்கிறார்

" நாங்க தான் Cokeல Mix பண்ணி கொண்டு வந்துட்டோம்ல . . "


3.

இறுதியில் படம் முடிந்த பின் ஒருவர்

" மத்த படம்னா 9.30 க்கு விடுவான்

கடைக்கு போய் அவசர அடியா அடிக்கணும்

புண்ணியவான் இந்த Director

8.45 க்கு முடிச்சிட்டான் . . .

போய் நிதானமா அடிக்கலாம் "இப்படி படத்தை ஒரு நண்பன் போல் பாவித்து

உணர்பூர்வமாய் ஒன்றி அதனூடே

பேசி மகிழும் ரசிகர்கள் . . .


இயக்குனர் கமலகண்ணனுக்கு பாராட்டுக்கள்
- - - இரண்டாம் கோணசித்தன்Thursday, July 26, 2012

மிஸ்கின் படத்தை காப்பி அடித்த வெளிநாட்டு இயக்குனர் !?


தமிழ் பட DVDகளை வெளிநாட்டு இயக்குனர்கள்

பார்க்கும் காலம் வரும் - - - - மிஷ்கின்


பாத்துட்டாங்கய்யா .


பாத்துட்டாங்கFriday, June 22, 2012

சகுனி - பேராசையின் உச்சம்


ஜூன் 22 வர்றோம் ரெடியா இரு மாமா ன்னு

போஸ்டர்களும் பேப்பர் விளம்பரங்களும் அலப்பறை குடுக்க

காலையில கிளம்பிட்டாரு கோவுரு கோவிந்தன் மாமா . . .


கொட்டாயிக்கு போன கோவிந்தன் மாமா வுக்கு

பேரதிர்ச்சி . .

கட்டணம் 100 & 80 நு போட்ருந்தது . . .

அவர்கிட்ட இருந்தது 75

Ac யும் இல்ல

கக்கூசும் சரிகிடையாது

இவனுகளுக்கு 40 கூட அதிகம் தான்

அப்படின்னு யோசிச்சார் . .

அதுவில்லாம . .

நாம குடுக்குற பணத்துலேந்து 0.000000000000000000000000000001

பைசா மட்டும் எடுத்து குடுத்து

அகரம் அது இதுன்னு இவனுங்க குடுக்கற ஆக்டுக்கு

நேரடியா நம்மளே அரசாங்கம் மூலம் உதவி பண்ணுவோம்னு

முடிவெடுத்தார் . .

பக்கத்துல இருந்த டாஸ்மாக்ல புகுந்தாரு . . .

டாப் ஸ்டாரை வாங்குனாரு . .

உள்ள வுட்டாரு . .

கொஞ்ச நேரத்துல பூட்டியிருந்த பக்கத்து கடை வாசல்ல குறட்டைய போட்டாரு . .

சகுனி எப்படியோ . .

ஆனா டாப் ஸ்டார் சூப்பர் ஹிட் !Sunday, May 6, 2012

வழக்கு எண் 18/9 - - - மாற்று முகமுடியில் மற்றுமொரு ஏமாற்று சினிமா
மோசடி போலீஸ்

அயோக்கிய அரசியல் வாதி

விபசாரம் மூலம் ஸ்கூல் முதலாளி ஆனா பொம்பளை

அவளோடதறுதலை பையன்

செல்போனுக்கு அலையுற பொண்ணு

இவங்களால பாதிக்கப்பட்ட ரெண்டு அப்பாவிகள்ள

ஒருத்தர் எடுக்குற ரிவெஞ்சு ட்விஸ்ட்டு . . .

இப்படி வணிக சினிமாவுக்கான அணைத்து கூறுகளையும்

கொண்ட திரைப்படத்தை பட்ஜெட் காரணமாய்

புதுமுகங்களை கொண்டு

வீடியோ காமெராவை

கையில் பிடித்து shake ஆக எடுத்தால்

மாற்று சினிமாவா . . . ?

இந்த லட்சணத்தில் . . .

இயக்குனர் சின்ன பசங்களுக்கு

" மாட்டிகொள்ளாமல் ஆசிட் வீசுவது எப்படி . .

ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டே அவளின் அங்கங்களை

படம்பிடிப்பது எப்படி "

போன்ற விஷ (ய)ங்களை யும் கற்றுத்தருகிறார் . .

கந்து வட்டி கொடுமை . .

முறுக்கு கம்பெனி கொடுமை . .

முடங்கி விட்ட கூத்து கலை . .

நோய்வாய்படும் விபச்சாரி . .

போன்ற பெரிய விஷயங்களை போகிறபோக்கில்

சொல்லும் இயக்குனர் . .

MMS . .

மாணவர்கள் சிகரெட் பிடிப்பது . .

பிளஸ் 2 மாணவி குளிப்பது . . .


போன்ற சில்லறை விஷயங்களை விபரமாக காட்டுவது

அபத்தம் .


இது போன்ற விளிம்பு நிலை மனிதர்களை

சிமப்த்தி வரும் வண்ணம் காட்டி எடுக்கபடும் Cheating படங்களை

70 ரூபாய் கொடுத்து பார்பதற்கு பதில்

எக்மோர் ரயிலடி அருகில்

நடைபாதையில் எப்போதும் உறங்கியும்

விளையாடிக்கொண்டும் இருக்கும் சிறுமிக்கு

ஒரு சிலேட்டும் பலப்பமும்

வாங்கி கொடுப்பது உத்தமம் . . .

. . . . . . . இரண்டாம் கோணசித்தன்

Wednesday, April 25, 2012

மை மற்றும் ஓகே ஓகே ( ஒரு கோப்பை ஒரு குப்பை )

மேற்கண்ட இரு படங்களை சமீபத்தில் காண நேர்ந்தது . .

மை எளிமையான பார்க்ககூடிய ஒரு அரசியல் திரைப்படம் . . .

மேம்போக்காய் வாழும் ஒரு இளைஞன்

காதலிக்காக மேயர் ஆகும் கதை . .

ஆங்காங்கு அபத்தங்கள் தென்பட்டாலும் ஓகே ரகம்

ஆனா ஓகே ஓகே வில் அபத்தங்கள் மட்டுமே

முழுமையாக நிரம்பி வழிகிறது . . .

அவ்வப்போது சரக்கு பாட்டிலை திறந்து நுகர்ந்து மட்டும் பார்க்கும்

இளைஞன் . . . இறுதியாய் அதை குடிப்பதே கதை . .

அரங்கம் அதிர ரசிக்கின்றனர் மக்கள் இதை . .

எதிர்கால முதல்வர் . . நாயகன்

டாஸ்மாக் அம்பாசடர் . . இயக்குனர்

ஒரு மத்திய நகரத்தில் ஓகே எட்டு காட்சிகள் ஓட

மை இரண்டு காட்சிகள் . . .

மை படத்தில் ஒரு மனநோயாளி மனிதனை நாயகன் சீர் செய்வது போல்

ஒரு காட்சி வருகிறது . . .

அது போன்ற ஒரு சீர் திருத்தம் தேவைபடுகிறது

நம் ரசனைக்கும் . . .

ஓகே படத்தில் ஒரு இடத்தில் ஒத்தா என்ற சொல்

உச்சமாய் ஒலிக்க . . .

தியேட்டர் எங்கும் உலா வரும்

வருங்கால முதல்வர் . .

கூச்சமின்றி சொல்கிறார் . . .

" இது நல்ல திரைப்படம் . . வரி விலக்கு வேண்டும் "

இதுதான் நகைச்சுவை . . .

/ இரண்டாம் கோணசித்தன்

Thursday, April 12, 2012

தமிழ்ப் புத்தாண்டு

தமிழ்ப் புத்தாண்டு


தையா சித்திரையா ன்னு


தலைவர்களுக்குதான் குழப்பம் . .


ரெண்டுத்தையும் லைட்டா கொண்டாடிட்டு


தீபாவளிய டைட்டா கொண்டாடுறதுதான்


தமிழனின் வழக்கம் . . .

Monday, April 2, 2012

3சனி இரவு . . .
போதை அதிகமாகி வாந்தி எடுக்க எத்தனிக்கையில் . .
அந்த கொலவெறி தியேட்டர் கண்ணில் பட்டது
உள்ளே நுழைந்தேன் . . .
3 மடங்கு கட்டணம்

ஆரம்பிக்கும் போது 333 பேர் இருந்தனர் . . .
முடியும் போது 3 பேர் குறட்டை விட்டபடி கிடந்தனர் . . .
இறுதியில் வாந்தி நான் எடுக்கவில்லை . . .
திரைப்படம் என்ற பெயரில் . . .
அவர்கள் எடுத்திருந்தார்கள் . . . !

- இரண்டாம் கோணசித்தன்

Saturday, March 3, 2012

வேளச்சேரி படுகொலைகள் - உதிரிபூக்கள் இறுதி காட்சி


வேளச்சேரி படுகொலைகள் குறித்து

விசாரிக்க சென்ற சமூக செயற்பாட்டாளர்களை

சிலர் விரட்டி விட்ட நிகழ்வை கேள்வி பட்ட போது . . .

உதிரிபூக்கள் படம் தான் நினைவிற்கு வந்தது . . .

அப்படத்தின் இறுதி காட்சியில் . . .

தன்னை கடலை நோக்கி தள்ளிவரும் மக்களை நினைத்து

விஜயன் சொல்வார் . . .

" நான் பண்ணின பாவத்திலே பெரிய பாவம்

உங்களை இப்படி மாற்றியதுதான் . . . "

இந்த ஆட்சியாளர்களும் இப்படிதான் மக்களை

மாற்றி வைத்துள்ளார்கள் . . . !

சமீபத்தில் . .

சென்னை புறநகர் பகுதி ஒன்றில் ஒரு காட்சியை காண நேரிட்டது . . .

அதிகாலை நேரம் . . .

அரைகுறையாய் திறந்திருந்த டாஸ்மாக் பார் . . .

வெளியில் பைக்கில் உட்கார்ந்தவாறு . .

ஒரு காவலர் . .

உள்ளிருக்கும் பார் ஆளிடம் உரக்க சொல்கிறார் . .

" என்ன பிரச்சனைனாலும் என்கிட்டே சொல்லு . .

செல் நம்பர் இருக்குதானே . . ? "

இந்த ஆளுங்களா துப்பாக்கி சண்டை போடுவாங்க . . . ?

Wednesday, February 29, 2012

வேங்கை , வேட்டை - தமிழின் இரு முக்கிய ஆவணப்படங்கள்


வேங்கை வேட்டை - தமிழின் இரு முக்கிய ஆவணப்படங்கள்

ஒரு ஆம்னி பேருந்தில் 12 மணி நேர பயணம் . . .

மேற்கண்ட இரு திரைப்படங்களையும் அவ்வப்போது காண நேர்ந்தது . . .

நிச்சயம் இவை குறிப்பிடத்தக்க முயற்சிகளே . . .

புதியதாய் படமெடுக்க முயற்சிக்கும் அனைவருக்கும்

கண்டிப்பா இதவிட பெட்டரா ஒரு படம் எடுக்க முடியும் என்ற நம்பிக்கை விதையை

ஊன்றும் திரைப்படங்கள் இவையிரண்டும் . . .

இந்த திரைப்படங்களை advance booking செய்து பார்த்தவர்களுக்கு பத்மஸ்ரீ விருதும்

தியேட்டர் Q - வில் நின்று டிக்கெட் வாங்கி பார்த்தவர்களுக்கு கலைமாமணி விருதும்

வழங்கப்பட உள்ளதாம் . . .

உலகிலேயே திரைப்படங்களை பார்த்தவர்கள் விருது வாங்குவது இதுவே முதல் முறையாம் . . .

பின்குறிப்பு - நாங்க எப்படி வேணாலும் படம் எடுப்போம்டா . .

அதை பாக்குறது உங்க கடமை . . .

என்ற ஆணவமாய் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் இவையிரண்டும் . . . .

தலைப்பில் ஆணவம் . . ஆவணம் ஆகிவிட்டது . . . மன்னிக்கவும்

------- இரண்டாம் கோண சித்தன்

Saturday, February 11, 2012

சூப்பர் ஸ்டாருக்கு தமிழ் அர்த்தம் என்ன ?
சூப்பர் ஸ்டாருக்கு தமிழ் அர்த்தம் . . . .


கண்டிப்பாக சிறந்த கஞ்சன்னுதான் இருக்கும் போலிருக்கு . . .

அஞ்சாறு வருஷமாய் பீல்டில் இருக்கும் நயன்தாராவே 5 லட்சம்

தானே புயல் நிவாரணத்துக்கு குடுக்கும்போது

இத்தினி வருஷமா கோடிக்கணக்குல சம்பாதிச்சிட்டு

இவரு குடுக்குறது வெறும் 10 லட்சம்

மகள்களும் சினிமாவுல கொலைவெறியா சம்பாதிக்கிறாங்க

மனைவி ஸ்கூல் நடத்தி சம்பாதிக்கிறாங்க . . .

நியாயமா ரஜினி . . . . ?