"2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் கேள்வி:
2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் உங்கள் மகளையும், மனைவியையும் சி.பி.ஐ. விசாரித்துள்ளது. கலைஞர் தொலைக்காட்சியின் கணக்குகளையும் விசாரித்துள்ளது. இதன்காரணமாக, உங்களுக்குத் தெரியாமல் இதில் எதுவுமே நடைபெற்றிருக்க முடியாது என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்களே?
பதில்:
இது ஊழலே அல்ல. இதைப் பற்றி செய்திகள் வெளிவந்துள்ளன. கலைஞர் டி.வி. என்பதில் என் பெயர் இடம்பெற்றிருக்கிறதே தவிர எனக்கு அதில் எந்தவிதமான உரிமையும் கிடையாது. அதில் என்னுடைய மகள் (கனிமொழி) 20 சதவீத பங்குதாரர். என்னுடைய மனைவி தயாளு 60 சதவீத பங்குதாரர். நிர்வாகி சரத்குமார் 20 சதவீத பங்குதாரர். கலைஞர் டி.வி. கருணாநிதிக்கு சொந்தமானதல்ல. கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் அதிலே பங்குதாரர்களாக இருக்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டு எழுந்தவுடனேயே அதுகுறித்து சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார். ஒரு கடனை அடைப்பதற்காக ஒருவரிடம் கடன்பெற்றார்கள். பிறகு பெற்ற கடனை வட்டியோடு திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அதற்கு வட்டி, வருமான வரித்துறைக்கான தொகை எல்லாம் தரப்பட்டு, வருமானவரித் துறைக்கும் விவரம் தெரிவித்துள்ளனர். இதற்குப் பிறகு அது எப்படி ஊழலாகும் என்று எனக்குத் தெரியவில்லை. "
ஸ்பெக்ட்ரம் ஊழலில் இந்த கடன்விவகாரத்தில் மட்டுமே
இவர்களுக்கு தொடர்பு என்பது போல் விவகாரத்தை திசை திருப்ப முயல்கிறார் கலைஞர் . . .
சோத்துல பூசணியை மறைத்த காலம் போய் பிரியாணியில பரங்கிக்காயை மறைக்கிறார்
தமிழகத்தின் தலைசிறந்த ராஜதந்திரி