
மே மாதத்திற்கு முன் கேப் விடாமல்
திரைப்படத்துறையில் இயங்கிய நிதி கம்பனிகள்
தற்போது அவ்வளவாய் களத்தில் இறங்காத காரணத்தை
கலைஞர் சொல்வாரா ?
சுமார் 30 வருடங்கள் இருக்கும் . . .
நான் நான்காம் வகுப்பு படித்து கொண்டிருந்த நேரம் . . .
வீட்டு அருகாமையில் ஒரு ரிக்ஷாக்காரர் வசித்து வந்தார் . . .
அவர் ஒன்றும் இலக்கியவாதியில்லை . .
வசனகர்த்தாவும் இல்லை . .
ஒரு சாதாரண மனிதர்தான் . . .
ஆனால் . . . தன் ரிக்ஷாவில் எழுதியிருந்தார் . . .
"பேராசை பெருநஷ்டம்"
சொந்த கட்சி வேட்பாளரையே அடித்த விஜய்காந்துக்கா ஓட்டு . . .?
ஒன்றரை லட்சம் தமிழர்கள்
3000 சீக்கியர்கள் படுகொலைகளுக்கு
"2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் கேள்வி:
2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் உங்கள் மகளையும், மனைவியையும் சி.பி.ஐ. விசாரித்துள்ளது. கலைஞர் தொலைக்காட்சியின் கணக்குகளையும் விசாரித்துள்ளது. இதன்காரணமாக, உங்களுக்குத் தெரியாமல் இதில் எதுவுமே நடைபெற்றிருக்க முடியாது என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்களே?
பதில்:
இது ஊழலே அல்ல. இதைப் பற்றி செய்திகள் வெளிவந்துள்ளன. கலைஞர் டி.வி. என்பதில் என் பெயர் இடம்பெற்றிருக்கிறதே தவிர எனக்கு அதில் எந்தவிதமான உரிமையும் கிடையாது. அதில் என்னுடைய மகள் (கனிமொழி) 20 சதவீத பங்குதாரர். என்னுடைய மனைவி தயாளு 60 சதவீத பங்குதாரர். நிர்வாகி சரத்குமார் 20 சதவீத பங்குதாரர். கலைஞர் டி.வி. கருணாநிதிக்கு சொந்தமானதல்ல. கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் அதிலே பங்குதாரர்களாக இருக்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டு எழுந்தவுடனேயே அதுகுறித்து சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார். ஒரு கடனை அடைப்பதற்காக ஒருவரிடம் கடன்பெற்றார்கள். பிறகு பெற்ற கடனை வட்டியோடு திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அதற்கு வட்டி, வருமான வரித்துறைக்கான தொகை எல்லாம் தரப்பட்டு, வருமானவரித் துறைக்கும் விவரம் தெரிவித்துள்ளனர். இதற்குப் பிறகு அது எப்படி ஊழலாகும் என்று எனக்குத் தெரியவில்லை. "
ஸ்பெக்ட்ரம் ஊழலில் இந்த கடன்விவகாரத்தில் மட்டுமே
இவர்களுக்கு தொடர்பு என்பது போல் விவகாரத்தை திசை திருப்ப முயல்கிறார் கலைஞர் . . .
சோத்துல பூசணியை மறைத்த காலம் போய் பிரியாணியில பரங்கிக்காயை மறைக்கிறார்
தமிழகத்தின் தலைசிறந்த ராஜதந்திரி
" விடுபட்டோர்- விரட்டப்பட்டோர்- துரத்தப்பட்டோர்- விலை போகாது வெங்குருதி தனிற் கமழ்ந்த எங்கள் வீர மூச்சு- தமிழ் மூச்சு எனத் தடந்தோள் தட்டி வந்திடுவீர் வாகை சூட என்று கண் மூடி தவம் இருக்கும் துறவிகளைப்போல்- தூய ஞானிகளைப்போல் -நான் தவம் இருக்கின்றேன்- என் உயிரினும் இனியோரே! இன்ப முடிவினை எல்லோரும் சேர்ந்து சுவைப்போம்! வருக! வருக! வரிப்புலி வரிசையே வருக"
------ முதல்வர் கருணாநிதி
எதிரியே ஆனாலும் ஒருவர் தர்மசங்கடமான
அவமானசூழலில் சிக்கிதவிக்கையில்
அவரை சீண்டுவது என்ன விதமான அரசியலோ . .?
நிச்சயம் அப்படி செய்வது அருவருப்பான ஒன்றுதான் . . .
ராஜினாமா என்று கூறிவிட்டு ராகுல்காந்தியிடம் மண்டியிட்டதைவிட
வைகோவின் நிலை அவ்வளவு கேவலம் அல்ல. . .
ஆனால் ஒன்று நிச்சயம் கலைஞர் எப்போதுமே கலைஞர்தான். . . தலைவர் அல்ல