Wednesday, September 1, 2010

கணடுகொள்ளாதது ஏனோ?




தர்மபுரி பஸ்

எரிப்பு தீர்ப்பு குறித்து
விரிவாக கவரேஜ் செய்துள்ள தினகரன் நாளிதழ்

தங்கள் மதுரை அலுவலக எரிப்பு வழக்கு பற்றி
கணடுகொள்ளாதது ஏனோ?

Friday, August 6, 2010

யார் ஹீரோ ?

60 வயதில் அடுத்தவர் மனைவியிடம் முத்தம் வாங்கும் இவர் ஹீரோவா ?




அல்லது அசிங்கம் பாராது உழைக்கும் இவர் ஹீரோவா ?

Sunday, July 18, 2010

என் அம்மா மட்டும் ஒத்துக்கொள்ளவே மாட்டாள்


டீக்கடையில் காபி கேட்டேன்
டபரா செட்டில் கொடுத்தார்கள்

கூட்டநெரிசல் பேருந்தில்
இளம்பெண் ஓருத்தி இருக்கை கொடுத்தாள்

தொடர் வண்டி முன்பதிவில்
கட்டணசலுகை கிடைத்தது

பலானபட இடைவேளையில்
என்னையே அனைவரும் கவனித்தனர்

ஜவளிக்கடையில் ஜீன்ஸ் செக்ஷனில்
சுற்றினால் . . கடைப்பையன்கள் சிரிக்கிறார்கள்

சென்ட் பாட்டிலோடு வீட்டிற்கு போனால்
மனைவி கூட முறைக்கிறாள்




ஆனால் . . . .
என் அம்மா மட்டும் ஒத்துக்கொள்ளவே மாட்டாள்
எனக்கு வயதாகிவிட்டதை . . . .

Tuesday, June 29, 2010

தமிழ்ச் செம்மொழி



கே.கே. நகர்லேந்து
செவன்ட்டீன் டி பிடிச்சி
சென்ட்ரல் போய்
இண்டர்சிட்டியில் ஏறி
கோவை ஜங்ஷன்ல இறங்கி
போடப்பட்டிருந்த ரூமுக்கு
ஆட்டோவுல போய்
செல்போனை சார்ஜ் போட்டுட்டு

"அப்பாடா லேட் ஆகாம
கரெக்ட் டயத்துக்கு வந்துட்டோம்" னு
மனதுக்குள் பெருமூச்சு விட்டார் . . .

தமிழ்ச் செம்மொழி மாநாட்டில்
கலந்துக்க போன தமிழர் ஒருத்தர் .

Monday, June 21, 2010

Saturday, June 5, 2010

ஹி . . . ஹி . . .

அனுஹாசன் காதுல இருக்குற தொங்கல்
வேணும்னு
மனைவி என்னை தொங்குறது இல்ல . . .

அனுஷ்கா போட்டுருக்குற ஜீன்ஸ்
வேணும்னு
என் மூத்த பொண்ணு தொல்லை பண்றதில்லை

அருண் ஐஸ்க்ரீம் ஐ கோன்
வேணும்னு
சின்னப்பையன் நச்சரிக்கிறதில்லை

இதைல்லாம் நினைக்கும் போது
பத்து நாள் முன்னாடி
பழுதான டி.வி பொட்டிய
சரி பண்ணனும்னு தோணவே மாட்டேங்குது . . .

Tuesday, June 1, 2010

விகடனில் ஒரு சரியான மதிப்பீடு








தமிழக முதல்வர் பற்றி

நேரு ஸ்டேடியத்திலும் வள்ளுவர் கோட்டத்திலும்

பல்வேறு புகழ் மதிப்பீடுகள்

ரஜினி - கமல் தொடங்கி

வைரமுத்து - வீரமணி போன்றோர்களால்

அடிக்கடி பொளக்க வாசிக்கபடுகின்றன . . .


இந்த சத்தங்கள் தாங்காத வள்ளுவர் கோட்டத்து

தேர்கூட கொஞ்சம் கொஞ்சமாய் அவ்விடத்தை

விட்டு நகர்வதாக கேள்வி . . . . .

இந்நிலையில் விகடனில் ஒரு சரியான மதிப்பீடு