Showing posts with label தமிழ்ச் செம்மொழி. Show all posts
Showing posts with label தமிழ்ச் செம்மொழி. Show all posts

Tuesday, June 29, 2010

தமிழ்ச் செம்மொழி



கே.கே. நகர்லேந்து
செவன்ட்டீன் டி பிடிச்சி
சென்ட்ரல் போய்
இண்டர்சிட்டியில் ஏறி
கோவை ஜங்ஷன்ல இறங்கி
போடப்பட்டிருந்த ரூமுக்கு
ஆட்டோவுல போய்
செல்போனை சார்ஜ் போட்டுட்டு

"அப்பாடா லேட் ஆகாம
கரெக்ட் டயத்துக்கு வந்துட்டோம்" னு
மனதுக்குள் பெருமூச்சு விட்டார் . . .

தமிழ்ச் செம்மொழி மாநாட்டில்
கலந்துக்க போன தமிழர் ஒருத்தர் .