Friday, April 5, 2013

செம மொக்கை - 2









". . . . தேசி -  2 படத்திற்கான நடிகர் தேர்வு செய்யும் இடம்  . .

பிரதான பாத்திரத்திற்கு  பலர் போட்டியிட  . .

நிஜமான பிச்சை கோலத்தில் வந்த ஒருவர்

தேர்வு செய்ய பட்டார்  . .

இயக்குனருக்கு ரொம்பவே மகிழ்ச்சி

அவரை பற்றி விசாரித்தார்  . .

"என்ன பண்றிங்க ?'

"திரைப்படம் வாங்கி வெளியிடறது "

"அப்டியா கடைசியா என்ன படம் வெளியிட்டிங்க ?"

" மொத்ததுல ஒரு படம் தான் வெளியிட்டேன் "

" அப்டியா  . .  அது என்ன படம் "

"  . . . . தேசி "

Wednesday, March 20, 2013

ஏழை பங்காளர்கள்





வெளிநாட்டு கார்களை இந்தியாவில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்கள்

இறக்குமதி செய்யும் போது வரிச் சலுகைகள் உண்டு.

இந்த வரிச் சலுகையை பயன்படுத்திக் கொண்டு வெளிநாட்டு கார்களை

இறக்குமதி செய்யும் டிராவல்ஸ் நிறுவனங்கள்

முக்கிய பிரமுகர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றன.

இப்படித்தான் மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதி பயன்படுத்தி வரும்

ரூ. 20 கோடி மதிப்பிலான ஹம்மர் ரக (Hummer) வெளிநாட்டு காரும்


இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
 

- News

Tuesday, March 19, 2013

இதுதான் ஓலக சினிமாவாம் . . .


" எதுக்குய்யா

ரெண்டு பேரும் இவ்ளோ சந்தோஷமா ஓடுறாங்க . . . ?"



"' கஷ்டப்பட்டு நடிச்சது போதும் . .

பாத்து வேற கஷ்டப்படனுமா . .

படத்தை பாக்க வேணாம் கிளம்புங்க 'ன்னு

டயரடக்கரு சொல்லிபுட்டாராம் . . "


- - - - -

ஒரு டவுட்டு . . .

இதுதான் ஓலக சினிமாவாம் . . .

மத்த படம் எல்லாம் செவ்வா கெரக்கதிலையா ஓடுது ?

Wednesday, March 13, 2013

ஒன்பதுல குரு

ஒன்பதுல குரு போவோமா  . .

நான் வரலைப்பா  . . .

ஏன்  ?

தியேட்டர் காரங்களே இப்டி விளம்பரம் குடுத்தும்  போறது ரிஸ்கு  . .

அப்ப என்ன பண்ணலாம்  . . . ?

இந்த  பிரேம்ஜி குரூப்பு  . . . வடிவேலு குரூப்பு  . . .
சந்தானம் குரூப்பு  . . . விவேக்கு குரூப்பு  . . .
இதை தாண்டி ஒரு குரூப்பு  . . .
டிவியில் காமெடி பண்ணுது அதை பாப்போம் வா  . . .







Friday, August 24, 2012

கலைஞரின் டெசோ - அட்டகாசம்





அட்டகாசம் படத்தில் ஒரு காட்சி உண்டு . . .

அது என்னவெனில்

பிணம் இல்லாத வெறும் பாடை ஒன்றை ஒரு குழுவினர்

தூக்கி வருவர் . .

இன்னொரு பக்கம் மற்றொரு குழுவினர் ஒருவனை

விரட்டி வந்து வெட்டி கொல்வர்

பிறகு இரு குழுவினரும் இணைந்து

செத்தவனை பாடையில் தூக்கி வைத்துகொண்டு

சந்தோசமாய் செல்வர்

இதுதான் கலைஞரின் டெசோ . . .

அக்கூட்டத்தில் மற்றுமொரு காட்சி . . .

ஸ்டாலின் மற்றும் வீரமணி தோன்றியதுதான்


ஒருவர் மட்டன் சாப்பிட்டு லேசாக பல் வலித்தால் கூட

சிகிச்சைக்கு லண்டன் செல்வார்

மற்றொருவர் நகம் கடிக்கும்போது விரலில் லேசாக ரத்தம் கசிந்தால்

அமெரிக்க ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிவிடுவார் . . .

ஆனால் முக்கிய சிகிச்சைக்காக பார்வதி அம்மாள்

சென்னை வந்த போது .. . . . . ?

Friday, August 3, 2012

மதுபானக்கடை - தெளிவாய் ஒரு முயற்சி





1.

படம் துவங்கும் போதே

ஒரு எதிர் குரல் . .

" என்னங்கடா Montage Media

Vintage ன்னு மாத்துங்கடா . . . "

2.

Interval விடும் போது

"இங்கு டீ தான் கிடைக்கும்

சரக்கு கிடைக்காது "என்று திரையில் குரல் ஒலிக்க . .

ஒருவர் முனகலாய் சொல்கிறார்

" நாங்க தான் Cokeல Mix பண்ணி கொண்டு வந்துட்டோம்ல . . "


3.

இறுதியில் படம் முடிந்த பின் ஒருவர்

" மத்த படம்னா 9.30 க்கு விடுவான்

கடைக்கு போய் அவசர அடியா அடிக்கணும்

புண்ணியவான் இந்த Director

8.45 க்கு முடிச்சிட்டான் . . .

போய் நிதானமா அடிக்கலாம் "



இப்படி படத்தை ஒரு நண்பன் போல் பாவித்து

உணர்பூர்வமாய் ஒன்றி அதனூடே

பேசி மகிழும் ரசிகர்கள் . . .


இயக்குனர் கமலகண்ணனுக்கு பாராட்டுக்கள்




- - - இரண்டாம் கோணசித்தன்











Thursday, July 26, 2012

மிஸ்கின் படத்தை காப்பி அடித்த வெளிநாட்டு இயக்குனர் !?


தமிழ் பட DVDகளை வெளிநாட்டு இயக்குனர்கள்

பார்க்கும் காலம் வரும் - - - - மிஷ்கின்


பாத்துட்டாங்கய்யா .


பாத்துட்டாங்க